தென்காசி மாவட்டத்தில் வயல் பணியில் ஈடுபட்டிருந்த குடும்பத்தினர் மீது கடந்தை வண்டுகள் தாக்கிய பரிதாப சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் மூத்த தம்பதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவம், தென்காசி அருகே சீவநல்லூர் பகுதியில் வசிக்கும் சண்முகப்பிள்ளை (வயது 82) மற்றும் அவரது மனைவி மகராசி (வயது 80) உள்ளிட்ட குடும்பத்தினர் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த ஒரு தென்னைமரத்தில் இருந்த விஷவண்டுகள் கூடாரமொன்று தன்னிச்சையாக கலைந்ததால், அதிகமானவிஷ வண்டுகள் புறப்பட்டு அப்பகுதியிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
விஷவண்டுகளின் கடியால் வலி தாங்க முடியாமல் தவித்த அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மூத்த தம்பதிகள் இருவரும் உயிரிழந்தனர். இவர்கள் தவிர மற்ற மூவரில் ஒருவர் தற்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு நபருக்கு நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலுக்குக் காரணமான கடந்த வண்டுகள் கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளன. வயலில் வேலையின்போது ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடி, அந்த பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
