தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு கனமழை காரணமாக வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவலாஞ்சி, பைன் பாரஸ்ட் ஆகிய சுற்றுலா தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதேபோன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதால் அங்கும் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் வருகிற 25-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.