உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜிபூரில் கங்கை நதி அலைகளில் மிகப்பெரிய எடையுள்ள கல் ஒன்று மிதப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை சிலர் தெய்வீகத்தின் சக்தியால் என தெரிவித்து வருகின்றனர். சிலர் இதனை விஷ்ணு மற்றும் சிவனின் அம்சங்கள் ஆகவும் அவற்றின் சின்னங்களாகவும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் சிலர் அறிவியல் பூர்வமான காரணங்களை பதிவிட்டு வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து அக்கல்லை அப்பகுதியில் நின்ற மக்கள் கரைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.அந்த கல்லின் எடை கிட்டத்தட்ட 250-300 கிலோ வரை இருக்கும் என கூறுகின்றனர்.