தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி (ஜமுமக) திடீரென விலகியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமீமின் தலைமையிலான ஜமுமக தற்போது தவெகவுடன் புதிய கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த எதிர்பாராத அணிமாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் தமீம், “அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதற்கான முக்கிய காரணம், அந்த கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பதே,” எனத் தெரிவித்தார்.
மேலும், “மதச்சார்பற்ற அரசியலை வலியுறுத்தும் எங்கள் கட்சி, மதவாத கட்சியான பாஜகவுடன் இணைந்த கூட்டணியில் தொடர முடியாது என்பதால் தான், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம்” என தெளிவுபடுத்தினார். தற்போது தமீம் தலைமையிலான கட்சி, விஜய் தலைமையிலான தவெகவுடன் சேர்ந்து தேர்தல் அரங்கில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.
