திமுக கட்சியின் எம்பி சிவா காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என கலைஞர் கருணாநிதி தன்னிடம் சொன்னதாக கூறிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அவர் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது முரசொலி வெளியிட்டுள்ள ஒரு பழைய புகைப்படத்தை தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
எத்தனை பதிவுகளை இட்டு, பூசி மெழுக முயன்றாலும், உண்மை வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது, மாண்புமிகு முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்களே! அப்படியானதை நான்கு கருப்பு-வெள்ளை புகைப்படங்களால் நீங்கள் அழிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது!
கர்ம வீரர் காமராஜரை அவமானப்படுத்த திமுக பரப்பிய அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும், கேலிச் சித்திரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் காங்கிரஸ் கட்சி மறந்திருக்கலாம், ஆனால் தமிழக மக்களின் நினைவில் இவையெல்லாம் நீங்கா ரணங்களாக இன்றளவும் இருக்கின்றன!
உங்கள் துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள், பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திப் பேசவில்லை என நீங்கள் மழுப்பலாம். உங்கள் அமைப்புச் செயலாளர் திரு. ஆர் எஸ் பாரதி அவர்கள், “காமராஜருக்குக் கல்லறை கட்டியதே நாங்கள் தான்” என்று கூறவில்லை என உண்மையைத் திரிக்கலாம்.
ஆனால், இதோ முரசொலி இதழிலேயே மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் நீங்கள் காமராஜரை இழிவுபடுத்திய காட்சிகள்.
இதை உங்களால் மறுக்க முடியுமா, அல்லது இன்று நியாயப்படுத்திப் பேச முடியுமா?
ஆகவே, பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது! காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த
விஷயம்! என்று பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ,
எத்தனை பதிவுகளை இட்டு, பூசி மெழுக முயன்றாலும், உண்மை வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது, மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்களே! அப்படியானதை நான்கு கருப்பு-வெள்ளை புகைப்படங்களால் நீங்கள் அழிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது!
கர்ம வீரர் காமராஜரை அவமானப்படுத்த திமுக பரப்பிய… https://t.co/iG4WGRiHxS pic.twitter.com/ynCDvdQQBn
— Nainar Nagenthiran (@NainarBJP) July 17, 2025
“>
