லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக தரவரிசை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பகுப்பாய்வு நிபுணத்துவம் பெற்ற ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் கியூ எஸ் வரும் 2026 ஆம் ஆண்டுக்கான உயர்கல்விக்கான சிறந்த நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது
அதன்படி அந்தப் பட்டியலில் 2லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடனும், உலகத் தரவரிசை பட்டியலில் குறைந்த பட்சம் 2 பல்கலைக்கழகங்களுடனும் உள்ள 150 நகரங்கள் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து சுமார் 1 லட்சம் பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அந்த மதிப்பீட்டில் முதல் 130 இடங்களுக்குள் இந்தியாவை சேர்ந்த 2 நகரங்கள் இடம் பெற்றுள்ளது.
அதாவது அந்தப் பட்டியலில் முந்தைய ஆண்டை விட, மும்பை 15 இடங்கள் முன்னேறி 98 வது இடத்தையும், டெல்லியில் 7 இடங்கள் முன்னேறி 14 ஆம் இடத்தையும், பெங்களூரு 22 இடங்கள் முன்னேறி 108 வது இடத்தையும், சென்னை 12 இடங்கள் முன்னேறி 128 வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த லண்டன் தற்போது 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தென் கொரியர் தலைநகர் சியோல் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
