தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவரது அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. இந்நிலையில் இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகம் அருகே சிலர் ஆயுதங்களுடன் நோட்டமிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்து வருவதால் விசாரணை நடத்தக் கோரி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆதவ் அர்ச்சனா புகார் அளித்துள்ளார்.
