தமிழகத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்குகிறது. இந்த முகாம் மூலமாக புதிய பயனாளிகள் மகளிர் உரிமைத்தொகைக்கும், புதிய ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பிக்கலாம். இதே போன்று மக்களின் பல குறைகள் இந்த முகாம் மூலம் நிவர்த்தி செய்யப்பட இருக்கும் நிலையில் இந்த முகாம் மூலம் மனு கொடுப்பவர்களின் பிரச்சனை 45 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மகளிர் உரிமைத் தொகை மற்றும் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தல் போன்றவைகளும் 45 நாட்களுக்குள் நிறைவாகும். உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்களை தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று வினியோகம் செய்வார்கள். அதோடு அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் அவர்களே சொல்லிக் கொடுப்பார்கள்.

இதன் மூலம் பயனாளிகள் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப ஆவணங்களை கைவசம் வைத்து விண்ணப்பிக்கலாம். மேலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா இந்த முகாம் தொடர்பாக 1100 என்ற உதவி எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார். அதோடு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பிக்கும் போது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் வாரத்தில் நான்கு நாட்கள் இந்த முகாம்கள் நடைபெறும் என்றும் முகாம் நடைபெறுவதற்கு முன்பாகவே வீடு வீடாக சென்று இது பற்றி மக்களிடம் சொல்வார்கள் என்றும் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.