கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் அம்பரீஷ்-மஞ்சுளா என்ற ஸ்ருதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் மஞ்சுளா ஒரு சின்னத்திரை டிவி நடிகை ஆவார். இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக மஞ்சுளா மற்றும் அம்பரீஷ் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் மஞ்சுளாவின் கண்களில் மிளகாய் பொடியை தூவி அவரை கத்தியால் சரமாரியாக அவரது கணவன் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த மஞ்சுளா தற்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அம்பரீசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கும் மஞ்சுளாவுக்கும் திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் மஞ்சுளா டிவி நடிகை என்பதால் மகள்களையும் வீட்டையும் கவனித்துக் கொள்ளவில்லை. நான் தன் என் மகள்களை கவனித்துக் கொண்டு குடும்பத்தையும் பார்க்கிறேன். மஞ்சுளாவுக்கு குழந்தைகள் மீது அக்கறையோ, அன்போ கிடையாது.

அவருக்கு டிவி நிகழ்ச்சிகளில் சூட்டிங் செல்வது மற்றும் மது குடிப்பது பார்ட்டிகளில் கலந்து கொள்வது போன்றவைகள்தான் முக்கியம். என்னிடம் சொல்லாமல் அவர் உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு 15 நாட்கள் சென்று விட்டார். அவர் திரும்பி வந்த பிறகு 25 லட்ச ரூபாய் கொடுத்து குத்தகைக்கு வசிக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும் என என்னிடம் சண்டை போட்டார். அதோடு என்னையும் மகள்களையும் பிரிந்து விட்டு தன்னுடைய அண்ணன் வீட்டில் வசிக்க முடிவு செய்தார்.

இது போன்ற பல காரணங்களால் தான் நான் என் மனைவியை கொலை செய்ய முயன்றேன் என கூறினார். மேலும் தற்போது அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.