உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோட்வாலி பகுதியில் மது போதைக்கு அடிமையான ஒரு தந்தை தன்னுடைய 2 மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இங்கு ஒரு கணவன் மனைவி தன்னுடைய 13 மற்றும் 15 வயது மகள்களுடன் வசித்து வருகிறார்கள். இதில் கணவன் தினசரி மது குடித்துவிட்டு வரும் நிலையில் நேற்று முன்தினமும் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்து இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் இளைய மகள் வெளியே சொல்லாமல் இருந்த நிலையில் இதனை சாதகமாக்கிக் கொண்ட தந்தை நேற்று இரவு மூத்த மகளையும் குடிபோதையில் பலாத்காரம் செய்தார். தங்களுடைய தந்தையே தங்களின் வாழ்க்கையை சீரழித்து விட்ட நிலையில் மகள்கள் வெளியே சொல்லாமல் இருந்த நிலையில் இந்த விவகாரம் தாய்க்கு தெரிய வர அவர் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் அந்த தந்தையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
