சுவாரசியமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வயலில் ஒருவர் டிராக்டரை வைத்து உழுது கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பறவை தனது முட்டைகளுக்கு அருகில் நின்று இறக்கைகளை விரித்து வாகனத்தை நிறுத்துங்கள் என கூறுவது போல நிற்கிறது.

டிராக்டர் டிரைவரும் அந்த பறவை அருகே சென்ற போது வாகனத்தை நிறுத்திவிட்டார். பறவை என்றாலும் அதுவும் ஒரு தாய் தான். தனது முட்டைகளை பாதுகாக்க அது உதவி கேட்கிறது.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பாராட்டலுக்குள்ளாகி வருகிறது. ‘bapu_nikulsinh_rathod’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோக்கு இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் வந்துள்ளன.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஒருவர், “இந்த வயலை நான் கொடுக்க தயார், ஆனால் இந்த பறவைக்கு எதுவும் நடக்கக்கூடாது” என பதிவு செய்துள்ளார். மற்றொருவர், “மிக அருமை, மனதிலிருந்து வணக்கம்!” எனக் கூறியிருக்கிறார். “

உங்கள் வார்த்தைகள் என் மனதை தொட்டுவிட்டது” என்ற ஒருவர் கருத்தும், “அவள் தாய்…மட்டுமே அந்த அளவுக்கு பாதுகாக்கக்கூடியவர்” என்ற உணர்ச்சிவயப்பட்ட கருத்தும் வைரலாகி வருகிறது. இயற்கையின் உண்மை உணர்வுகளை வெளிக்கொணரும் இக்காட்சி, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையே உள்ள அன்பையும் மதிப்பையும் மறுபடியும் நினைவூட்டுகிறது.