சென்னை திருவொற்றியூர் பகுதியில் ராஜலட்சுமி (55) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். இவர் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக அது வெடித்து சிதறியது.
குக்கர் வெடித்த வேகத்தில் அதன் மேல் மூடி ராஜலட்சுமியின் தலையில் ஓங்கிப்பட்டது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ராஜலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
