சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகம் ஊமனாம்சேரி பகுதியில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது இங்கு தங்கி இருந்த 18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காப்பகத்தின் உரிமையாளர் அருள் தாஸ், அவரின் மகள் பிரியா, கார் டிரைவர் பழனி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த குழந்தைகள் காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி இருந்த நிலையில் அவர்களுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த காப்பகத்திற்கு அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற போது குழந்தைகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கிட்டத்தட்ட 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.