ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கதுஷ்யம் கோயிலில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கும் அங்கு உள்ள உணவக, பொருள் விற்பனையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, தாக்குதலாக மாறியது. இந்த சம்பவம் கோயில் வளாகத்தில் நிகழ்ந்ததோடு, இதன் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், பெண்கள் உட்பட இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. பக்தர்கள் மற்றும் கடைக்காரர்கள் என்று கூறப்படும் சிலர், கோபத்தில் கட்டுப்பாடின்றி தாக்குதல் மேற்கொண்டதை காணலாம். இது போன்ற சம்பவம் இது முதல் முறையல்ல, ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு முறைகள் குறைவாக உள்ளதைக் காட்டும் சில வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதுவே மீண்டும் நடந்துள்ளதால், கோயில் பாதுகாப்பு மீதான நம்பிக்கை சிதைந்துள்ளது.
ये वीडियो देखना कितना शर्मनाक/भयावह है !
देश-दुनिया में प्रसिद्ध राजस्थान के खाटूश्याम मंदिर में श्रद्धालुओं को लाठी-डंडों से पीटा गया
जिसमें महिलाएं भी शामिल थी, वहाँ के दुकानदार गुंडों ने ये सब हरकत की
सोचिए राजस्थान में कानून का कितना डर है !pic.twitter.com/53C5cixKb0
— Nigar Parveen (@NigarNawab) July 11, 2025
இந்தச் சம்பவத்துக்கு நேரடி நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பது வருத்தத்திற்குரியது. சம்பவம் நடந்த இடத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. எனினும், சிசிடிவி காட்சிகள் கொண்டு சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, சில நாட்களுக்கு முன் ஒரு பக்தரின் ரூ.2.5 லட்சம் ரொக்கமும், 25 கிராம் தங்கமும் திருடப்பட்ட சம்பவம் பதிவானது. தொடர்ந்து நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள், பக்தர்கள் மனதில் பாதுகாப்பு குறித்த கோர அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
