
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தில் எட்வின் பிரியன் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி. இதுவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்த நிலையில் அது பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ரேபிஸ் தொற்று பாதித்திருப்பது தெரிய வந்த நிலையில் உடல்நலம் மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் நாய் கடித்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அதற்கு சிகிச்சை பெறுவது அவசியம் என்பதை இந்த இளைஞரின் மரணம் அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.