
புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் நிலையில் அவரது மனைவி (48)ஒரு காட்டேஜில் பணிபுரிந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மகன்கள் இருவரும் பள்ளிக்கு செல்லும் நிலையில் இளைய மகளுக்கு மனநலப் பிரச்சினை இருப்பதால் மூத்த மகள் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து அவரை கவனித்துக் கொள்கிறார்.
இவர்களது மூத்த மகளுக்கு 17 வயது ஆகும் நிலையில் பெற்றோர் வேலைக்கு செல்வதால் இளைய சகோதரிக்காக வீட்டில் இருந்து படிப்பை நிறுத்திவிட்டு அவரை கவனித்துக் கொள்ளும் வேலையை பார்க்கிறார்
இவரது மனைவிக்கு உடல்நல பிரச்சனைகள் இருந்ததால் கடந்த சில நாட்களாக தன்னுடைய கணவன் அழைத்தபோதும் தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு வந்த தொழிலாளி குளிர் அதிகமாக இருக்கிறது உன் அம்மா என்னுடன் உடலுறவுவுக்கு வர மறுப்பு தெரிவிக்கிறார் எனவே நீ என்னுடன் உறவுக்கு வா என மூத்த மகளை அழைத்துள்ளார்.
இதைக் கேட்டு சிறுமி கதறி அழுத நிலையில் தன் தாயிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த தாயுடன் உடனடியாக ஊட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது