
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே வெம்மணங்குடியை சேர்ந்த இளம் பெண் அபிநயா (17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் அதிக நேரம் பேசியதால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதேபோல் கடந்த ஜூன் 7ஆம் தேதி அன்று அபிநயா செல்போனில் அதிக நேரம் பேசியுள்ளார்.
அதனை கவனித்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அபிநயா வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து உவரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இளம்பெண் பெற்றோர் கண்டித்ததால் தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிர படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.