
புதுச்சேரியில் கவர்னர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி இடையே நிர்வாக ரீதியாக கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாக உள்ள சுகாதாரத்துறை பதவிக்கு துணை இயக்குனர் அனந்தலட்சுமியின் பெயரை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரைத்துள்ளார்.
ஆனால் நேற்று இயக்குனர் பதவிக்கு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேல் பெயர் வெளியானது. அதனால் அதிருப்தியடைந்த முதல் முதல்வர் சட்டசபையில் இருந்த சபாநாயகர் செல்வத்தை அழைத்து இனி ஒத்து வராது நான் ராஜினாமா செய்யப் போகிறேன் என கூறினார். இதையடுத்து மாலையில் நடைபெற்ற கவர்னர் விழாவை புறக்கணித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் அமைச்சர் நமச்சிவாயத்திடம் தெரிவித்துவிட்டு முதல்வர் வீட்டிற்கு சென்றார். அமைச்சர் நமச்சிவாயம் கவர்னரை சந்தித்து பேசிவிட்டு பின் முதல்வரை சந்தித்தார். அங்கு ஏற்கனவே காத்திருந்த செல்வத்துடன் சேர்ந்து முதல்வரை சமாதானப்படுத்தினர். ரங்கசாமி சமாதானம் அடையாததால் இருவரும் விரக்தியில் புறப்பட்டைச் சென்றனர்.