
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிச் செயலாளராக பணியாற்றி வரும் எம். எஸ். சண்முகம் அவர்களின் தாயார் ராஜலட்சுமி (வயது 85), ஜூலை 8ஆம் தேதி வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். “பெற்ற அன்னையின் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அத்தகைய பேரன்பை இழந்து, தேற்ற முடியாத துயரில் வாடும் சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்” என முதல்வர் தெரிவித்துள்ளர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள சண்முகத்தின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராஜலட்சுமி அவர்களின் உடலுக்கு, முதல்வர் நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சரின் செயலாளர் முனைவர் எம்.எஸ்.சண்முகம், இ.ஆ.ப., அவர்களின் தாயார் திருமதி எம்.எஸ்.ராஜலட்சுமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானதையொட்டி அன்னாரது உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். pic.twitter.com/S4gZekbwL2
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 8, 2025
“>
இந்நிகழ்வின் போது, அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர்.