
சென்னை மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் மக்களுக்கு பிரதான போக்குவரத்தாக ரயில்வே போக்குவரத்து அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக போக்குவரத்து சேவையில் பேருந்து வசதி உள்ளது.
அதிலும் குறிப்பாக அனைத்து தரப்பு மக்களுமே குறைவான கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசால் தற்போது 20 ஆயிரத்துக்கும் மேலாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வசதிக்கேற்ப போக்குவரத்து துறையினர் அவ்வப்போது புதிய பேருந்துகளை மாற்றி கொண்டே இருக்கின்றனர்.
இதுவரை இயக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பேருந்துகள் பல்வேறு வண்ணங்களில் இருந்துள்ளது. அதன்படி தற்போது அறிமுகப்பட இருக்கும் புதிய பேருந்தின் நிறம் கண்ணை கவரும் வகையில் இருப்பதாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது.
அந்தப் பேருந்து வெள்ளை, மஞ்சள், ஆரஞ்ச், சாம்பல், கருப்பு ஆகிய பல்வேறு நிறங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அந்த பேருந்தை பார்த்தவுடன் அதில் ஏறி வலம் வர ஆசையை தூண்டுவதாக பேருந்து நிறம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சிறிது நாட்களில் அந்த பல வண்ண நிற அரசு பேருந்து பயன்பாட்டுக்கு வர இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் தெரிவித்திருக்கின்றனர். இந்த பேருந்தில் ஏசி வசதியும், இருக்கையில் தாராளமாக இரண்டு பேர் அமரும் வகையிலும் அமைந்துள்ளது.
தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக அரசு பேருந்துகளும் கண்ணை கவரும் வண்ணத்தில் களம் இறங்க போவதாக தெரிகிறது.