இந்தியா- இங்கிலாந்து 5 போட்டி தொடரில் இரண்டாவது தொடரை கடந்த ஜூலை 2ஆம் தேதி விளையாடியது. அதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார், முதல் இன்னிங்சில் இரட்டை சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்து விளாசிய இந்திய கேப்டன் சுப்மன்ஹில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்தியா 1-1 என்ற கணக்கில் போட்டியை சமன் செய்துள்ளது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 10ஆம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் மைக்கேல் வாகன் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரரான ஜாக் கிராலியை வெளுத்து வாங்கியுள்ளார்.

இதில் அவர் கூறுகையில், “பல ஆண்டுகளாக நான் உட்பட பலவீரர்கள் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளார்கள். ஆனால் அதில் முதலிடம் ஜாக்கிராலிக் தான். ஏனெனில் 50க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 31 ரன்கள் சராசரியுடன் ஐந்து சதங்கள் மட்டுமே இதுவரை அடித்துள்ளார்.

வரும் தொடருக்கு முன்னதாக சுப்மன் கில்லை பாருங்கள். அவர் தொடருக்கு முன்னதாக 35 ரன்கள் சராசரியுடன் உள்ளே களமிறங்கினார். ஆனால் தற்போது 4 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அவருடைய சராசரி 42 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கு முழு முக்கிய காரணம் அவரது மனநிலை மற்றும் விளையாடும் திறன். மேலும் டெஸ்ட் தொடர்களில் எப்படி ஆட வேண்டும் பந்து எவ்வாறு வருகிறது என்பதற்கு ஏற்றவாறு சரியாக புரிந்து கொண்டு விளையாடுகிறார் .அதனால் தான் அவரால் நீண்ட இன்னிங்ஸில் விளையாட முடிகிறது. அதேபோன்று ஜாக்கிராலியும் அதிக இன்னிங்ஸ் விளையாட வேண்டும்”என கூறினார்.