தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருப்பவர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த். இவர்கள் பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் இருவரும் கைதாகி சிறையில் இருக்கின்றனர். இவர்களுக்கு அதிமுக முன்னால் நிர்வாகி பிரசாந்த் என்பவர் போதை பொருளை சப்ளை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவர்களையும் நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கும் நிலையில் மேலும் இருவரையும் சமீபத்தில் கைது செய்தனர்.

இந்த வழக்கில் இன்னும் சில பிரபலங்கள் கூட சிக்கலாம் என்று கூறப்படுவதால் இந்த வழக்கு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் ஜாமீன் கேட்டு போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அதற்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பின்னர் அவர்களின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியது. அதன்படி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.