
இந்தியாவில் உள்ள ஹைதராபாத் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தம்பதியினர் தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீ வெங்கட். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்துள்ளனர்.
இவர்கள் குடும்பத்தோடு அமெரிக்காவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் குடும்பத்தோடு அட்லாண்டாவில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் காரில் டல்லாஸ் பகுதிக்கு மீண்டும் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராத விதமாக லாரி ஒன்று அவர்களது காரை மோதியுள்ளது.
அதனால் பெரும் விபத்து ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதில் காரில் இருந்த குடும்பத்தினர் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.