தமிழகத்தில் நேற்று புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த தேரோட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் நெல்லை மாவட்டமே களைகட்டும். இதன் காரணமாக இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வருகிற 19ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
