
ஆந்திர மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். புரமித்ரா என்ற ஆப்-ஐ பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் தங்களது குறைகளை நேரடியாக உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
இதன் மூலம் அவர்களின் குறைகள் சரி செய்யப்படும் என நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் எவ்வகையான குறைகள் ஏற்பட்டாலும் அதனை புகைப்படமாக எடுத்து இந்த ஆப்பின் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
அவர்கள் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்காக நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு பிரச்சனைகள் சரி செய்யப்படும். மேலும் உடனடியாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சனைகள் அன்றே சரி செய்யப்படும். தீர்க்க பட முடியாத பிரச்சனைகளாக இருந்தாலும் 3 முதல் 15 நாட்களுக்குள் சரி செய்யப்படும்.
கடந்த 3 மாதங்களில் இதுவரை 10,421 பிரச்சனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 9889 பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில பிரச்சனைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்யப்படாவிட்டால் அதற்கு அதிகாரிகளே முழு பொறுப்பு என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த ஆப்பின் மூலம் நகராட்சி பகுதிகளில் உள்ள குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது செல்போன்களில் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செய்தி ஆந்திர மாநிலம் முழுவதும் பரவலாக வைரலாகி வருகிறது.