உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20 சதவீதம் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து சேர்க்கைக்கான காத்திருக்கும் நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15 சதவீதம், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 சதவீதம், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் 15 சதவீதம் இடங்கள் நடப்பாண்டில் உயர்த்தப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.