பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில், மெஹ்சௌல் ரயில்வே பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், நேர்முகமாக ஒரு பெரிய விபத்தைத் தடுக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதிர்ஷ்டவசமாக பொதுமக்களின் விழிப்புணர்வும், சரியான நேரத்தில் எடுத்த செயல்பாடும் ஒரு பெரும் உயிரிழப்பை தவிர்த்தது.

அதாவது குடிபோதையில் இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தை நேரடியாக ரயில்வே தண்டவாளத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். அருகில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த ரயில் ஒரு பெரிய விபத்துக்கு காரணமாக இருக்க வாய்ப்பு இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மக்களும் கூச்சலிட்டு ஓடிவந்து, அந்த ஆட்டோவை தண்டவாளத்திலிருந்து விலக்க முயன்றனர். இறுதியாக, ரயில் வருவதற்கு முன்னர் அந்த ஆட்டோவை தண்டவாளத்திலிருந்து இழுத்து வெளியேற்றினர்.

பீகாரில் ஏற்கனவே 2016-ம் ஆண்டு முதல் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதை முதல்வர் நிதிஷ் குமாரின் தலைமையில் பெண்களின் கோரிக்கையை அடுத்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், இது நடைமுறைத்தில் பல்வேறு சிக்கல்களும், சட்டவிரோத விற்பனையும் அதிகரித்துள்ளன.

 

 

மதுவிலக்குச் சட்டம் இருந்தபோதிலும், மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மதுவும், போதைப்பொருட்களும் உள்ளூரில் பரவலாக கிடைக்கின்றன. இதன் விளைவாக பல சம்பவங்கள்  ஏற்படுகின்றன. சமீப காலங்களில் விஷ மதுவால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். மேலும், நீதிமன்றமும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம், ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மதுவிலக்குச் சட்டத்தின் செயல்திறன் குறித்தும் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வால் ஒரு பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாலும், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்களைத் தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.