டெல்லியில் உள்ள பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக ரேஹான் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் இந்த காதலை ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையில் டெல்லி விமான நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வரும் ரேஹான் இளம் பெண்ணின் வீட்டில் தனது சாதி அடையாளத்தை மாற்றி கூறியுள்ளார்.

அதோடு திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன் காரணமாக அப்பெண் 2 முறை கர்ப்பமாகி பின்னர் அதனை கலைத்துள்ளனர். இந்நிலையில் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்மாறு ரேஹானிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்து போன அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ஆசிட்டை  குடித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிட் குடித்ததால் அவரது உள்ளுறுப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த ரேஹானை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.