பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் தனது பயணத்தை தொடங்கிவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது. அரசியலில் தனது பயணத்தை தொடங்கி விட்டதால் சினிமாவில் படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் ஏற்கனவே அறிவித்தார்.

இதனால் விஜய் கடைசியாக நடித்து வரும் ஜனநாயகம் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சுவாரசியமான பல வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும்.

 

View this post on Instagram

 

A post shared by Thalapathy Female Hearts (@thalapathy_female_hearts)

அந்த வகையில் நடிகர், நடன இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட ராகவா லாரன்ஸ் ஒரு நிகழ்ச்சியின் போது நடனம் ஆடுவதற்காக விஜய்யை மேடைக்கு அழைக்கிறார். அவரது அழைப்பை ஏற்று விஜய் மேடைக்கு வந்து அங்கிருப்பவர்களுடன் இணைந்து நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்துகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது.