
சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 320 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9105 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9933 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79464 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 121 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 121000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.