சென்னை நுங்கம்பாக்கத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உறவினர்கள் அச்சத்தில் இருந்தனர்.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் எரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரின் வீட்டில் அந்த மாணவி இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற உறவினர்கள் மாணவியை மீட்டனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரித்த போது சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவிக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அவரது வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவியின் தாத்தா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விசாரித்தனர். இதற்கிடையில் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு வீடியோவிலும் அதனை பதிவு செய்து வெளியிட்டனர்.

இதயடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரக் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, எப்போதும் போல் சிறுமி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், விசாரணை முடிவில் தான் மாணவி விவாகரத்தில் என்ன நடந்தது என்பது தெரிய வரும் என்றும் கூறியுள்ளார்.