
தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருடைய கூட்டாளியான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இரு மாநிலங்கள் மேற்கொண்ட ஆபரேஷனில் சிக்கினர். இவர்களுடைய கூட்டாளியான அபூபக்கர் சித்திக்கை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது அபூபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு வேலூர் மருத்துவ அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013ல் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித்த வழக்கில் முக்கிய பங்காற்றிய அபுபக்கர் கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரை தமிழக காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஆந்திராவில் கைது செய்தனர். அதேபோன்று கடந்து 1999இல் தமிழக மற்றும் கேரளாவில் 7 இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முகமது அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.