
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமாயா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது. தற்போது 2 ஆண்டுகள் சித்தராமையா ஆட்சி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது முதலமைச்சர் மாற்றம் குறித்த பேச்சு புயலை கிளப்பியுள்ளது.
ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்ட இந்த சலசலப்பை சரி செய்ய சித்தராமையா முயற்சி செய்து வருகிறார். ஆனால் மீண்டும் அவருக்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ-வான எம் ஆர் பாட்டீல் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது. சோனியா காந்தியிடம் அவரை நான் தான் அறிமுகம் செய்தேன்.
அவருக்கு நல்ல அதிர்ஷ்டம் இருந்துள்ளது அதான் முதலமைச்சர் ஆகிவிட்டார். எனக்கு காட் பாதர் யாரும் இல்லை. சுர்ஜேவாலாவை சந்தித்தேன் அனைத்தையும் கூறினேன் பொறுமையாக கேட்டுக் கொண்டார். என்ன நடிக்க நடக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினார். இந்த வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.