சென்னையில் தீபாவளி சீட்டு, நகை சீட்டு போன்ற மோசடியை தொடர்ந்து தற்போது ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடி அரங்கேறி உள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் கல்பனா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாதம் 1000 கட்டினால் 12 மாதத்தில் 12000 ரூபாய்க்கு கூடுதலாக 4000 தருவதாக கூறி கூல் பீஸ் ஃபண்டு சீட்டு நடத்தி வந்துள்ளார்.

இதனை நம்பி அக்கம் பக்கத்திலிருந்து பெண்கள் பணத்தை கட்டி வந்துள்ளனர். அவர்கள் மாதம் 1000 ரூபாய் கட்டி வந்துள்ளனர். தற்போது அந்த பணத்தை திருப்பி கேட்டபோது உங்கள் பணத்தை வேறு நபரிடம் வட்டிக்கு விட்டிருந்தேன் அவர் தன்னை ஏமாற்றியதாக கல்பனா கூறியுள்ளார்.

இதனால் 52 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் தாங்கள் இழந்த ரூ.16 லட்சத்தை மீட்டு தருமாறு அவர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.