விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மகாலிங்கம் (55), செல்ல பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி(38), ராமஜெயம்(27), வைரமணி(32) ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லிங்குசாமி(45), மணிகண்டன் (40), கருப்பசாமி(27), முருக லட்சுமி(48) மற்றும் மதுரை அரசு ராசாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அழகுராஜா(28) ஆகிய 5 பேருக்கும் சிகிச்சை அளிக்க முதலமைச்சர். மு க ஸ்டாலின் உத்திரவிட்டார்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களது உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும் வளர்த்த காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு தல 1 லட்சம் ரூபாயும் லேசான காயமடைந்து மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருவதற்கு 5000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார்.