
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று இன்று மற்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் செய்யும் ஒட்டியும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.