
பிரபல வில்லன் நடிகரான பொன்னம்பலம் 1988-ஆம் ஆண்டு ரிலீசான கலியுகம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்சனை காரணமாக பொன்னம்பலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பண உதவி செய்தனர். தற்போது மீண்டும் உடல் நலக்குறைவால் பொன்னம்பலம் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உருக்கமாக பேசி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் மீண்டும் சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது உடல்நிலை சீராக இன்னும் இரண்டு மாதம் ஆகலாம். கமல், தனுஷ், ரவி மோகன், சிம்பு என்ற எல்லோரும் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றி. எனக்காக அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என உருக்கமாக பேசியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.