உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் நேற்றைய தினம் வீசிய பலத்த புயல் காற்றால், குடியிருப்பு ஒன்றின் தகரக் கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டது. அந்தத் தகரக் கூரை மிக வேகமாக வந்து, அருகில் நின்றிருந்த பெண்ணின் கழுத்துப் பகுதியை நோக்கிப் பாய்ந்தது. ஆனால், அந்த நொடிக் கணத்தில் சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண், மின்னல் வேகத்தில் நகர்ந்ததால் கழுத்தில் பட வேண்டிய தகரம் அவரைத் தள்ளிச் சென்றது.
Uttar Pradesh – In Etawah district, a tin shed was blown away in the air by the storm that struck yesterday evening. A woman narrowly escaped with her life as her neck was nearly severed !! pic.twitter.com/DbGxWiVK9p
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 10, 2026
இந்த விபத்தின் காட்சி தற்போது எக்ஸ் (X) தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு நொடித் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் பெரிய விபரீதம் நடந்திருக்கும். எந்தக் காயமும் இன்றி அந்தப் பெண் அதிசயமாக உயிர் தப்பியது காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. புயல் காற்று வீசும்போது தகரக் கூரைகள் எந்த அளவுக்கு ஆபத்தான ஆயுதங்களாக மாறுகின்றன என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.
