தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கும் நிலையில், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் மற்றும் அமீர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது கூலி படத்தின் முதல் பாடலான சிக்கிடு பாடலை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை அனிருத், டி ராஜேந்தர், அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.