
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
इसीलिए कहा जाता है कि जबतक जीत पक्की न हो जाए,
खुशी नहीं मनानी चाहिए। pic.twitter.com/m8E4pNdHXv
— Dr. Sheetal yadav (@Sheetal2242) June 22, 2025
அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறார். இந்நிலையில் வேகமாக ஓடிவரும் அந்த வாலிபர் இறுதிக்கோட்டை பார்த்ததும் தான் ஜெயிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு வேகத்தை குறைத்து மெதுவாகவும், அசால்ட்டாகவும் செல்கிறார்.
ஆனால் பின்னால் இருந்து வேகமாக வந்த மற்றொரு வாலிபர் முதலில் சென்ற வாலிபர் இறுதிக்கோட்டை நெருங்குவதற்கு ஒரு நொடிக்கு முன்னதாக இறுதிக்கோட்டை தாண்டி முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு சிலர், அதனால் தான் வெற்றி உறுதி செய்யப்படும் வரை, கொண்டாடக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.