உலகின் மிகச் சிறிய பசு இனங்களில் ஒன்றாக கருதப்படும் பிங்கனூர் பசுவின் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த இன பசுக்கள் பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் காணப்படுகின்றன.

பெரும்பாலும் 97 செ.மீ முதல் 107 செ.மீ வரை வளரக்கூடிய இவை, வெறும் ஒரு வயது ஆன பசுவாக இருந்தாலும் கூட நாயைப் போல சிறிய அளவில் இருக்கும் என்பது ஆச்சரியமாகும். இந்த வீடியோவில், மக்கள் புங்கனூர் பசுக்களை செல்லமாக வளர்த்துப் பராமரிப்பது, அவைகளை தடவி காம்பள்ட் பண்ணுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “அவ்வளவு சிறிய பசு இருப்பதே தெரியவில்லை”, “இவை நாய்களை விட கூட சின்னதா இருக்கே!” என வியப்பை தெரிவித்துள்ளனர். சிலர், “இதைக் குட்டி குழந்தை போல வளர்க்கலாம் போலிருக்கு”, “நானும் என் படுக்கையில தூங்க வைப்பேன்” என நகைச்சுவையுடனும், ரசனையுடனும் கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.

பிங்கனூர் பசுக்கள் மிக குறைந்த உணவிலேயே வாழ முடியும், அதிக பாலை வழங்கும் தன்மை கொண்டவை என்பதால், இவை விவசாயிகளிடையே அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

மேலும், இந்த பசு இனங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் பலரும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். “பிங்கனூர் இன பசு இந்தியாவின் பெருமை. இவற்றைப் பாதுகாப்பது நம் கடமை” எனக் கருத்து தெரிவிக்கிறார்கள். தற்போது வைரலாகும் இந்த வீடியோ, இந்த இன பசுக்களின் அழகையும், பயனையும் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துகிறது.