
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9-ம் தேதி படம் வெளியாகிறது. இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை மமீதா பைஜூ கலந்து கொண்ட போது அவரிடம் நடிகர் விஜயின் கடைசி படம் ஜனநாயகனா என்று கேட்கப்பட்டது. அதற்காக 2026 தேர்தல் முடிவுகளை பொறுத்து அடுத்த படத்தில் நடிப்பேனா இல்லையா என்பதை முடிவு செய்வேன் என்று தன்னிடம் கூறியதாக கூறியுள்ளார். மேலும் முன்னதாக நடிகர் விஜய் மிகவும் அமைதியானவர் படப்பிடிப்பில் கூலாக இருப்பார். இந்த விஷயம் நடந்தாலும் கூலாக ஹேண்டில் பண்ணுவார். நான் அவரிடம் பேசும் போதெல்லாம் ம்ம், ஹான்னு சொல்லுவார் என்று கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
“Vijay said he will decide whether to continue acting in films depending on the 2026 election results.” – #MamithaBaiju
JanaNayagan is NOT Vijay’s last film.😂
This is what we have been saying for a long time. ONE LAST TIME is just a gimmick. Fooling his own fans is a real… pic.twitter.com/wEksjLgR2o
— Kingsley (@CineKingsley) June 22, 2025