இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) கீழ் செயல்படும் துணை நிறுவனம் AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (AAICLAS) நிறுவனத்தில், மொத்தம் 396 காலிப்பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ₹21,500 முதல் ₹34,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

காலிப்பணியிடங்கள் விவரம்:
Security Screener – 230 பணியிடங்கள்

அமிர்தசரஸ்: 35

வதோதரா: 16

சென்னை: 176

Assistant (Security) – 166 பணியிடங்கள்

மொத்தம்: 396

கல்வித் தகுதி:
Security Screener: ஏதேனும் பட்டப்படிப்பு (பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம். போன்றவை).

பொதுப்பிரிவிற்கு: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள்

எஸ்சி/எஸ்டி: 55% மதிப்பெண்கள்

ஆங்கிலம் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி/இந்தி தெரிந்திருக்க வேண்டும்.

Assistant (Security): 12-ஆம் வகுப்பு தேர்ச்சி

60% மதிப்பெண்கள் தேவை.

ஆங்கிலம், இந்தி அல்லது உள்ளூர் மொழியில் பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.06.2025 தேதியின்படி 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

எஸ்சி/எஸ்டி: 5 ஆண்டுகள்

ஓபிசி: 3 ஆண்டுகள்

மாற்றுத் திறனாளிகள்: 10 ஆண்டுகள்

ஊதிய விவரம்:

Security Screener – ₹30,000 முதல் ₹34,000 வரை

Assistant (Security) – ₹21,500 முதல் ₹22,500 வரை

இந்த பணிகள் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும்.

தேர்வு முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவு/ஓபிசி: ₹750

எஸ்சி/எஸ்டி/பெண்கள்: ₹100

முக்கிய தேதிகள்:

விண்ணப்ப தொடங்கும் நாள்: 09.06.2025

விண்ணப்ப முடிவுத் தேதி: 30.06.2025

விண்ணப்பம் ஆன்லைன் வழியாக மட்டுமே செய்யவேண்டும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.