
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதினர்.
இந்நிலையில் அந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 19.2 ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தை தென்னாபிரிக்க கேப்டன் பவுமா அடிக்க முயன்றார்.
அப்போது அந்தப் பந்து சில நொடிகளில் கேட்ச்சை நோக்கி சென்றது. உடனே ஸ்லிப் ஆக இருந்த ஸ்மித் அதனை பிடிக்க முயன்றார். ஆனால் தந்து வேகமாக வந்து ஸ்மித்தின் வலது கையில் பட்டு கீழே விழுந்தது.
இதில் வலி தாங்க முடியாமல் ஸ்மித் கையைப் பிடித்துக் கொண்டு நின்றார். இதனை அடுத்து ஸ்ம்த்தின் வலது கையில் அடிபட்டதை எடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டார்.
அதன் பின் அவர்களுக்கு பதிலாக சாங் கொன்ஸ்டால் மாற்றுவீராக களத்திற்கு விளையாட வந்தார். பின்னர் ஸ்மித் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.