நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரைச் சேர்ந்தவர் ஆர்னே பை. டாக்டரான ஆர்னே பைக்கு 55 வயது ஆகிறது. இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை ஆர்னே பை 70-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பெண்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்  விசாரணை நடைபெற்றது.

குற்றம் உறுதியானதால் அவர் மருத்துவராக வேலை பார்க்க தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நார்வே நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆர்னே பைக்கு 21 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.