ஒரு மணமகன் தனது மணமகளுக்கு உறவினர்கள் கொடுத்த பரிசுப் பணத்தை ‘திருட’ முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ sarcasm.flix என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

வீடியோவில், மணமகனும் மணமகளும் மேடையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் அருகே வந்த உறவினர்கள் பணத்தை பரிசாக வழங்கி, பந்தலின் மேடையில் வைத்து செல்கின்றனர். அப்போது, மணமகன் அமைதியாக, மணமகளுக்கான பணத்தை சற்று சுருட்டி, அதை தனது கைக்குள் வைத்து கொள்ளும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த சம்பவத்தை அருகிலிருந்த கேமராமேன் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SARCASM FLIX (@sarcasm.flix)

இந்த வீடியோ தற்போது ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள், இந்த மணமகனை நகைச்சுவை கலந்த விமர்சனங்களுடன் ட்ரோல் செய்து வருகின்றனர். “சொந்த திருமணத்திலே யாருக்காக திருடுறீங்க தம்பி?” என்று ஒருவர் கேள்வியெழுப்ப, “பணம் எல்லாம் உன்னுடையதுதான் டா… கொஞ்சம் பொறுமையா இரு!” என மற்றொருவர் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.