அமெரிக்காவைச் சேர்ந்த புற்றுநோய் பாதிக்கப்பட்டவர், தன்னுடைய மருத்துவர் செய்த ஒரு பெரிய தவறால் தனது சிகிச்சை நின்று உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையில் இருந்ததாகக் கூறியுள்ளார். சமூக வலைதளமான X-இல், அவர் பகிர்ந்த பதிவு தற்போது பரவலாக பரவி வருகிறது.

“எனது மூளையில் உள்ள கட்டி வளர்ச்சி அடைந்துள்ளதாக 2017-ஆம் ஆண்டுக்கான பழைய MRI அறிக்கையை தவறாக பார்த்து, எனது கீமோதெரபி சிகிச்சையை நிறுத்த முயன்றார் என் மருத்துவர்,” என்று அவர் தெரிவித்துள்ளார். பின்னர், 2024 ஆம் ஆண்டுக்கான சரியான அறிக்கையைப் பார்த்தபோது, கட்டியின் அளவு குறைந்திருப்பதும், சிகிச்சை பலன் தருவதாக இருக்கிறதும் தெரியவந்தது.

“நான் என் மருத்துவரை நம்பியிருந்தால், தேவையில்லாமல் ஆபத்தான மூளை அறுவை சிகிச்சைக்கு உட்பட்டிருப்பேன்,” என அவர் பதிவில் எச்சரித்துள்ளார். அவரது பதிவு பலரைப் பாதித்துள்ளது.

இதனை அறிந்த டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சமீர் கவுல், “இரண்டாவது கருத்து (Second Opinion) மிகவும் அவசியம்” என தெரிவித்துள்ளார். அவர் X-இல் பதிலளித்தபோது, “எப்போதும் புத்திசாலித்தனமாக சிந்தியுங்கள், செயல்படுங்கள். உங்கள் உடலை கவனமாகக் பார்த்து கொள்ள வேண்டும்,” என குறிப்பிடுகிறார்.