நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரியம்புதூர் பகுதியில் உதயஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தன் உறவினர்களுடன் சம்பவ நாளில் வந்தார். அவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய கணவர் கவாஸ்கர் சவுதி அரேபியாவிற்கு கடந்த 14ஆம் தேதி வேலைக்காக சென்றார்.

அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மற்றும் ஆடு மேய்க்கும் வேலை கொடுத்தனர். அதோடு அங்குள்ள ஒரு 50 வயது பெண்ணிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என என் கணவரை வற்புறுத்தி அடிக்கடி கொடுமைப்படுத்துகிறார்கள். என் கணவரை பெண்ணுடன் உல்லாசமாக இருக்க கூறி வற்புறுத்துவது மட்டுமின்றி விலங்குகளுடனும் பாலியல் உறவு வைக்க வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார்கள்.

என் கணவர் இந்த கொடுமைகளை என்னிடம் போனில் கூறி அழுத நிலையில் அவர் இருக்கும் இடத்தை என் கணவரால் கூற முடியவில்லை. எனவே பல விதமாக பாலியல் தொல்லைகளை அனுபவித்து வரும் என் கணவரை தயவு செய்து மீட்டுத் தாருங்கள் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.