தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் மாற்றுக் கட்சியினரை கட்சியில் இணைப்பது மற்றும் புதிய நிர்வாகிகளை இணைக்கும் பணிகளையும் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளது. சமீபகாலமாக புதிய கட்சிகள் கட்சியில் இணைவது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி, பிற கட்சி இணைவது போன்ற நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

அதன் பிறகு கட்சிகள் தேர்தலை கணக்கில் கொண்டு புதிய நிர்வாகிகளை மாற்றம் செய்யும் பணிகளையும் செய்து வருகின்றனர். தற்போது 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் தற்போது திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

அதாவது கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக வணிகர் பிரிவு மாவட்ட தலைவர் சார்புதீன். இவர் திமுக கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளார். மேலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய தலைவர் ஒருவர் திமுகவிலிருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.