சென்னையில் ஓய்வு பெற்ற IFS அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப்புக்கு அதிக லாபம் ஈட்டும் பங்கு வர்த்தக செயல்களில் சேருமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர் 2 வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மோசடிக்காரர்கள் அனுப்பிய இணைப்பு மூலம் ஆன்லைனில் பங்கு வர்த்தக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் பின் மோசடிக்காரர்கள் அவரை செயலி மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர் தனது வங்கி கணக்கில் இருந்த 6. 58 கோடி பணத்தை டெபாசிட் செய்துள்ளார். அந்த பணத்தை டெபாசிட் செய்த பிறகு தான் அவர் தான் மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சைபர் கிரைம் போலீஸிடம் புகார் அளித்தார். அதன்படி காவல்துறை என வழக்குப்பதிவு செய்து பணப்பரிவர்தனை மூலம் கேரளாவைச் சேர்ந்த மோசடி கும்பல் இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதன் பின் நடத்திய தீவிர விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜித் நாயர்(47), அப்துல் சாலு(47), முகமது பர்வீஸ்(44) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் பயன்படுத்திய 3 செல்போன்கள்ளையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைன் மோசடி செய்வதற்காக மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கி கணக்குகளை பணம் கொடுத்து வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.